S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

செல்லுபடியாகும் திகதிகள்: மே 2025

அறிமுகம்

அரச ஈட்டு முதலீட்டு வங்கி ("SMIB", "நாங்கள்", "எங்களுக்கு", அல்லது "எங்களுடைய") உங்களது தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் உங்களது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக கையாள்வதற்கும் உறுதிபூண்டுள்ளது. இந்தக் கொள்கையானது நீங்கள் எமது இணையதளத்தை (www.smib.lk) பார்வையிடும்போது அல்லது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவல்களை எவ்வாறு நாம் சேகரிக்கிறோம், பயன்படுத்துகின்றோம், சேமிக்கின்றோம் மற்றும் வெளியிடுகின்றோம் என்பதை விவரிக்கின்றது. SMIB ஆனது 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க செயல்படுவதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) இன் கீழ் இயங்குமாறான கோட்பாடுகள் உட்பட சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

எமது இணையதளத்தை அணுகுவதன் மூலமோ அல்லது எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ, இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு உங்களது சம்மதத்தினை பெற்றுக்கொடுக்கின்றீர்கள். எந்தவொரு மாற்றங்களுடனும் புதுப்பித்த நிலையில் இருக்க இந்த ஆவணத்தை வழக்கமாக மதிப்பாய்வு செய்யுமாறு நாம் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.


கொள்கைகளின் நோக்கங்கள்

இந்தக் கொள்கையானது தற்போதைய வாடிக்கையாளர்கள், எதிர்கால வாடிக்கையாளர்கள் மற்றும் எமது டிஜிட்டல் தளங்களுக்கு வருகை தருபவர்களுக்கு பொருந்துகின்றது. இது நேரடியாக உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களையும், நிகழ்நிலை மற்றும் நிகழ்நிலை அல்லாத ஆகிய இரண்டு விதமான சேவைகளுடன் நீங்கள் தொடர்புறும் போது தானாகவே சேகரிக்கப்படும் தகவல்களையும் உள்ளடக்கியது.


நாம் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்கள்

நீங்கள் பெற்றுக்கொடுக்கும் தகவல்கள்

படிவங்களை நிரப்புவதன் மூலமாகவோ, ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ, அல்லது எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ SMIB உடன் நீங்கள் உறவினை பேணும் மட்டில் நாம் சேகரிக்கும் உங்களது தகவல்கள் கீழ்வருமாறு:

அடையாள விவரங்கள்:

தொடர்பு விவரங்கள்:

நிதி தகவல்:

பயன்பாடு & விருப்பங்கள்:

குறிப்பு:உணர்திறன் சார் தனிப்பட்ட தரவுகள் (மத நம்பிக்கைகள், மரபணு தரவு அல்லது உடல்நலத் தகவல் போன்றவை) குறிப்பிட்ட சேவைக்கு அவசியமாக இருக்கும்போது மட்டுமே சேகரிக்கப்படுகின்றன என்பதுடன் அவை உங்களது வெளிப்படையான ஒப்புதல் கிடைகும் பட்சத்தில் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றன.


தானாக சேகரிக்கப்படும் தகவல்கள்

நீங்கள் எமது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும்போது எமது அமைப்புகள் கீழ்வரும் தகவல்களையும் சேகரிக்கலாம்:

தொழில்நுட்ப தரவு:

பயன்பாட்டு தரவு:

டிஜிட்டல் செயலி தரவு:


மூன்றாம் தரப்பிலிருந்து சேகரிக்கப்படும் தகவகல்கள்

எமது சரிபார்ப்பு முறைமைகள் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்த, நாம் பின்வரும் நம்பகமான வெளி மூலங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களைச் சேகரிக்கலாம்:


நாம் எவ்வாறு உங்களது தகவல்களை பயன்படுத்துகின்றோம்

உங்களது தனிப்பட்ட தகவல்கள் எமது சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் சட்டத் தேவைகளுக்கு உடன்பட்டு இணங்குவதை உறுதி செய்வதற்கும் அவசியமானவையாகும். கீழ்வருவன அவ்வாறு பயன்படுத்தப்படும் முக்கியமான சந்தர்ப்பங்களாகும்:

சேவை வழங்கல்:

வாடிக்கையாளர் அனுபவம் & முகாமைத்துவம்:

இணக்கம் மற்றும் பாதுகாப்பு:

சந்தைப்படுத்தல் (ஒப்புதலுடன்):


செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படை

SMIBயானது பல்வேறு சட்ட அடிப்படைகளில் தனிப்பட்ட தரவுகளைச் நடைமுறைப்படுத்துகின்றது, அவற்றில் கீழ்வருவன அடங்குகின்றன:


தரவு பகிர்வு மற்றும் வெளிப்படுத்தல்

நாம் இரகசியத்தன்மையை கண்டிப்பாக பராமரிப்பதுடன் உங்கள் தரவை விற்றல் அல்லது வாடகைக்கு விடுதல் ஆகிய செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்கின்றோம். உங்கள் தகவல்கள் சேவைகளை வழங்குவதற்கு அல்லது சட்டத் தேவைகளுக்கு இணங்குவதற்கு அவசியமான போது மட்டுமே பகிரப்படும் என்பதுடன் பொதுவான வெளிப்படுத்தல்களில் கீழ்வருவன அடங்கும்:


சர்வதேச தரவு பரிமாற்றங்கள்

SMIB முதன்மையாக இலங்கையில் செயல்படுகின்ற போதிலும், உங்களது தகவல்கள் சில சமயங்களில் பிற நாடுகளிலும் நடைமுறை படுத்தப்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களின் போது நாம் பின்வருவனவற்றை உறுதி செய்கின்றோம்:


தகவல் பாதுகாப்பு

உங்கள் தரவு பாதுகாப்பு மிக முக்கியமானதொன்றாகும். SMIB அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு அல்லது வெளிப்படுத்தலை தடுக்க வலுவான தொழில்நுட்பங்களையும் நிறுவன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துகின்றது. எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்வருவன அடங்குகின்றன:

தரவு மீறல் நிகழும் அரிய சந்தர்ப்பத்தில், சட்ட அறிக்கை தேவைகளுக்கு இணங்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக அறிவிக்கும் எதிர்விளைவு திட்டம் எம்மிடம் உள்ளது.


தகவல் தக்கவைப்பு

நாம் உங்களது தனிப்பட்ட தரவுகளை, அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது சட்ட ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான கால வரையறைக்குள் மட்டுமே பேணுகின்றோம். கீழ்வருவனவற்றில் குறிப்பிட்ட நெறிமுறைகள் அடங்கும்:


சட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் உங்களுக்கான உரிமைகள்

நாங்கள் உங்களைப் பற்றி பேணுகின்ற தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்களுக்கு சில உரிமைகள் காணப்படுகின்றன. அவையாவன:

இந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றைப் செயற்படுத்த, கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும். எமக்கு அடையாள சரிபார்ப்பு செயல்முறைகள் தேவைப்பட நேரிடுவதனால் 21 வேலை நாட்களுக்குள் பதிலளிக்க முயற்சிப்போம்.


குக்கீஸ் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பம்

எமது வலைத்தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு குக்கீகள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பங்களானவை இவ்வகையில் எமக்கு உதவுகின்றன:

உங்கள் ப்ரவுஸர் அமைப்புகள் மூலம் குக்கீகளை கட்டுப்படுத்தமுடியுமென்ற போதிலும் அவற்றை முடக்குவது வலைத்தள செயல்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, எமது குக்கீ கொள்கையைப் பார்வையிடவும்.


மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகள்

எமது வலைத்தளத்தில் மூன்றாம் தரப்பு தளங்களுக்கான இணைப்புகள் காணப்படலாம். எனவே தயவுசெய்து இவற்றை கவனிக்கவும்:


இந்த கொள்கையில் மாற்றங்கள்

எமது நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் அல்லது சட்டக் கடப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்க நேரலாம். புதிய பதிப்பு எப்போதும் எமது வலைத்தளத்தில் வெளியிடப்படும், மேலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உரிய வழிமுறைகளின் மூலம் தெரிவிக்கப்படும்.


எம்மை தொடர்பு கொள்ள

இந்த கொள்கை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், மேலும் விளக்கம் தேவைப்பட்டால், அல்லது இந்த கொள்கையின் கீழ் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து எமது நல்லிணக்க மையத்தினை தொடர்பு கொள்ளவும்:

அரச ஈட்டு முதலீட்டு வங்கி
இல.269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை
மின்னஞ்ஞல்: info@smib.lk
தொலை: +94 11 7722722


புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்